உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம்  தாலுகா ஆபீஸ் வளாகத்தில் மக்கள் அதிர்ச்சி அடையும்படி ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றது. தனது நிலத்தை பதிவு செய்ய வந்த ஒரு இளைஞர், பைக்கின்  பிளாஸ்டிக் பையில் பெரிய தொகையை வைத்திருந்தார்.

அவர் சிறிது தூரம் சென்றதும், அருகில் இருந்த ஒரு குரங்கு அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பைக்கின் டிக்கியைத் திறந்து பையை எடுத்து ஓடியது. அதை பார்த்த மக்கள் குரங்கை துரத்தினார்கள். ஆனால், அது வேகமாக ஒரு உயரமான மரத்தில் ஏறி, பிளாஸ்டிக் பையை கிழித்து அதன் உள்ளே இருந்த 500 ரூபாய் நோட்டுகளின் கட்டுகளை வெளியில் எடுத்து வீசத் தொடங்கியது.

மரத்தின் மீது இருந்த குரங்கு நோட்டுகளை கீழே வீசத் தொடங்கியதும், கீழே நின்ற மக்கள் அதிர்ச்சியடைந்தனர். காற்றில் பறந்த பணம் மழை போல விழ, அங்கிருந்தவர்கள் அவற்றை சேகரிக்க ஓடினர். தாலுகா அலுவலகம் முழுவதும் பரபரப்பாகி, சிலர் அந்த காட்சியை மொபைல் மூலம் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனால் அந்த வீடியோ வேகமாக வைரலாகி, “குரங்கு பண மழை பெய்தது” என்ற தலைப்பில் பரவி வருகிறது.

“>

 

எனினும், அந்த இடத்தில் இருந்தவர்கள் நேர்மையுடன் நடந்துகொண்டு, சேகரித்த நோட்டுகளை சம்பந்தப்பட்ட இளைஞரிடம் திருப்பி வழங்கினர். தன்னுடைய பணம் மீண்டும் கிடைத்ததால் அந்த இளைஞர் நிம்மதிப்பெருமூச்சு விட்டார். இந்த அதிசய சம்பவம் தற்போது பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பேசுபொருளாக மாறி, குரங்கின் செயலால் மக்கள் சிரிப்பும் ஆச்சரியமும் கலந்த எதிர்வினை தெரிவித்து வருகின்றனர்