இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் கொல்கத்தா மெட்ரோ ரயில்வே கழகத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. மார்ச் மூன்றாம் தேதிக்குள் இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விளம்பர எண்:01/23/ metro railway kolkata.

பயிற்சியின் பெயர்: தொழில் பழகுநர் பயிற்சி.

மொத்த காலி பணி இடங்கள்: 125

பிரிவு வாரியான காலி பணியிடங்கள் விவரம்

1. Fitter-81

2. Electrician-2

3. Mechinist-9

4. Welder-9

வயதுவரம்பு: 15 முதல் 24 க்குள்  இருக்க வேண்டும்.

தகுதி: இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். பயிற்சியின் போது கொல்கத்தா மெட்ரோ ரயில்வே விதிமுறை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 கட்டணத்தை குறுக்கு கோடிட்ட ஐபிஓ -ஆக செலுத்த வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலகளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கு தகுதியானவர்கள் www.mtp. Indian railways.gov.in என்ற  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வருகிற மார்ச் 6-ஆம் தேதிக்கு முன்பாக தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.