சுமார் 150 ஆண்டுகள் பழமையான டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப்படும் சென்னை சென்ட்ரல்  ரயில் நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறி உள்ளது. அதாவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் வெளியூர்களுக்கு புறப்படும் பயணிகள் குறித்த அறிவிப்புகள் இனி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படாது. விமான நிலையங்களை போல பயணிகள் டிஜிட்டல் பலகைகளை பார்த்து அல்லது தகவல் மையத்தின் மூலமாகத்தான் ரயில்களின்  புறப்பாடு பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. ரயில் நிலையத்தின் பல்வேறு நுழைவு வாயில்களில் இதற்காக டிஜிட்டல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இவை அனைத்தும் நல்ல இயங்கும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மத்திய ரயில் நிலையத்தின் மூன்று நுழைவாயில்களிலும் டிஜிட்டல் பலகைகள் வைக்கப்பட்டு அதில் ரயில்களின் புறப்பாடு நேரம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் திரையிடப்படுகிறது. அதே சமயம் புறநகர் ரயில் நிலையங்களில் ரயில் புறப்பாடு போன்ற தகவல்கள் குறித்த அறிவிப்புகள் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படும் எனவும் மத்திய ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்பு அகற்றப்பட்டது சோதனை முயற்சி தான் எனவும் இனி விளம்பரம் தொடர்பான ஆடியோக்களும் ஒளிபரப்படாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.