பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு நியாயம் கிடைக்க தொடர்ந்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக தேசிய குழு உறுப்பினர் குஷ்பூ அவர்களுக்கு வாழ்த்துக்கள் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் எதையும் நேர்த்தியாகத் திறம்பட செய்வீர்கள் என்பதை அறிவேன். அதே போலவே இப்பணியையும் மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என சீமான் குறிப்பிட்டுள்ளார்.