செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, 60 ஆண்டுகாலமாக என்எல்சிக்கு நீலம் கொடுத்த,   மக்களுக்கு பட்டா கொடுக்க முடியாத நிலையில் இருந்த அரசை யார் கேள்வி கேட்பது? யார் தண்டிப்பது ? இந்த மாதிரி கையாலாகாத தனத்தின் காரணமாக தான் 1959இல் இருந்து 60 ஆண்டுகளாக இன்று வரை பட்டா கூட கொடுக்க முடியாத அரசாக தொடர்ச்சியாக இந்த அரசுகள் இருந்து வருகின்றன. இதனால் தான் விவசாயிகள் நிலத்தை கொடுக்க மறுக்கிறார்கள்.

அரசாங்கத்தின் உடைய….. அதிகாரிகளின் உடைய…. இந்த  அராஜக போக்கின் காரமாக தான் உள்ளவர்கள் தங்கள் நிலத்தை ஏன் தர வேண்டும் என்று கேட்கிறார்கள்.   இந்த போராட்டம் என்பது ஜனநாயகமான போராட்டம். திருவண்ணாமலையில் இதற்கு முன்பு சிப்காட் அமைப்பதற்கு வழிந்தே நிலத்தை எடுப்பதற்காக முயற்சி மேற்கொள்ளபட்ட பொது தொடர்ச்சியாக எதிர்ப்பு போராட்டம் நடந்தது.

இந்த பகுதி வளமான விவசாய நிலம்.  தொடர்ச்சியாக உழவுத் தொழிலில் ஈடுபடுகின்ற மக்களை இந்த நிலத்தில் இருந்து அப்புறப்படுத்தி எல்லாம் நீங்கள்  தொழிற்சாலை அமைத்து,  வேலைவாய்ப்புகளை உருவாக்கி விட முடியாது. தொழிற்சாலை என்பதை தரிசு நிலத்திலோ,   பயன்படுத்தப்படாத நிலங்களிலோ அமைப்பதிலே வேலைகளை உருவாக்குவதற்கான காரணம் இருக்கிறது. ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் விவசாயம் செய்யக்கூடிய நிலத்தில்  இருந்து விவசாய தொழிலாளர்களை அப்புறப்படுத்தி விட்டீர்கள் என்றால்,

தொழிற்சாலைகளில் விவசாயி சூப்பர்வைசர் வேலையா பார்க்க முடியும். விவசாயத்திற்கான ஸ்கில் செட் என்று சொல்வார்கள் அல்லவா ? அதற்கான தகுதியும்…. அதற்கான அனுபவமும் வேறு….. தொழிற்சாலைகளில்  வேலை செய்வதற்கான கல்வியும், அனுபவமும் வேறு…..  இது இரண்டுமே ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்றை  வைக்கவே முடியாது. இது ஒரு விதமான வேலைவாய்ப்பை கொடுகிறது. அது  வேறு விதமான வேலை வாய்ப்பை கொடுக்கின்றது.

இப்படியான இடத்தில் தொழில்மயமாக்கப்படுவதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் விவசாய தொழிலாளர்களை நீங்கள் தொழிற்சாலை தொழிலாளர்களாக மாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல், நீங்கள்  விவசாய நிலத்தை எல்லாம் தொழிற்சாலையாக மாற்றிவிட்டால்,  விவசாய நிலத்தில் வேலை செய்த தொழிலாளி நீங்கள்… சொல்லக்கூடிய தொழிற்சாலையில் வேலை செய்ய முடியுமா?  வாய்ப்பு இருக்கிறதா ? என கேள்வி எழுப்பினார்.