
செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, தொழில்மயமாக்கப்படுவதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் விவசாய தொழிலாளர்களை நீங்கள் தொழிற்சாலை தொழிலாளர்களாக மாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல், நீங்கள் விவசாய நிலத்தை எல்லாம் தொழிற்சாலையாக மாற்றிவிட்டால், விவசாய நிலத்தில் வேலை செய்த தொழிலாளி நீங்கள்… சொல்லக்கூடிய தொழிற்சாலையில் வேலை செய்ய முடியுமா? வாய்ப்பு இருக்கிறதா ? தொழிற்சாலையை நீங்கள் இழுத்து மூடிவிட்டீர்கள் என்றால், தொழிற்சாலை வேலை செய்தவர்கள் எல்லாம் விவசாய வேலை செய்து விட முடியுமா ?
இரண்டுமே வேறு வேறு விதமான அனுபவம் கொண்டவை. அதற்கான கல்வி பின்புலம் என்பது வேறு. அப்படி இருக்கக்கூடிய சூழலில்….. விவசாயிகளின் நிலத்தை பறித்து தொழிற்சாலை அமைப்பது என்பது… விவசாய தொழிலையும், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதாகத்தான் பார்க்க முடியும். விவசாயத்தில் இருக்கக்கூடிய மக்களை தொழிற்சாலைக்கு பயன்படுத்தக்கூடிய தொழிலாளர்களாக மாற்றுவதற்கான எந்த வேலை திட்டமும் அரசாங்கத்தில் கிடையாது.
அப்படி மாற்ற முடியாத சமயத்தில் அந்த மக்களை இடத்தை விட்டு அப்புறப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. அப்ப விவசாயி தன்னுடைய நிலத்தை கொடுக்கவில்லை என்றால், தங்களுடைய வாழ்வாதாரத்தை விட்டுத்தர தயாராக இல்லை என்பதுதான் அதனுடைய அர்த்தம். அப்படி இருக்கும் பொழுது விவசாயி சொல்லக்கூடிய கோரிக்கைக்கு அரசாங்கம் செவி மடுக்க வேண்டும். அந்த விவசாயிகள், அந்த நிலத்தை கொடுக்க தயார் நிலையில் இல்லை என தெரிவித்தார்.