
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கலைஞருக்கு 100 விழா நடிகர் சங்கம் நடத்துவது ரொம்ப அநியாயம் இது. கண்டிக்கத்தக்க விஷயம். ஏனென்றால் 1950இல் நடிகர் சங்கம் லேண்ட்… அப்போது டி நகரில் கிட்டத்தட்ட பல கிரவுண்டு அந்த நிலத்தோட மொத்த மதிப்பு 70 ஆயிரம் ரூபாய். அதற்கு நம்முடைய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.
அப்படி கொடுத்து வாங்கிய லேண்ட், கட்டிய கட்டிடம். நடிகர் சங்க தலைவராக இருந்தார்…. நடிகருக்கு பத்திரிகை நடத்தினார்…. அது மட்டும் இல்லாமல் தன்னுடன் நடித்த நடிகர் , நடிகைகள் எல்லாம் சங்கத்தின் தலைவராக அமர வைத்து அழகு பார்த்தார். அப்படியெல்லாம் அவ்வளவு பெரிய அளவிற்கு நடிகர் சங்கம் கட்டிடம் உருவாவதற்கு….
லேண்ட் வாங்குவதற்கு…. பாரத ரத்னா பட்டம் நடிப்பில் மட்டுமல்ல…. நிர்வாகத்திலும் இன்றைக்கும் சகாப்தம் என்று சொன்னால்….. மறைந்தாலும் வாழும் சகாப்தம். அந்த வாழும் சகாப்தம் நினைவு நாளில்…. இப்படி போய் கருணாநிதிக்கு…. தலைவருக்கு நூற்றாண்டுக்கு…. நடிகர் சங்கம் விழா எடுக்கவில்லை….. ஆனால் கருணாநிதிக்கு எடுக்கிறது எப்படி பாருங்கள் ? அப்படி எடுங்கள்…. ஆனால் அது நீங்கள் மிரட்டலுக்கு பயந்தீங்களோ… உருட்டலுக்கு பயந்தீங்களோ… வேற எதுக்கு பயந்தீங்க என எங்களுக்கும் தெரியாது…
அது யாருக்கும் தெரியாத விஷயம். ஆனால் அது ஏன் நினைவு நாளில் வைக்கிறீர்கள் ? அதுதான் என் கேள்வி…. தமிழ்நாடே துயரத்தில் இருக்கின்ற சூழ்நிலையில்…. 24ம் தேதி தலைவனை இழந்து துயரத்தில் தமிழ்நாடு தவித்துக் கொண்டிருந்த நிலையில்…. 24-ம் தேதி நடத்த வேண்டிய அவசியம் என்ன ? இது கண்டனத்திற்குரியது… நடிகர் சங்கம், தயாரிப்பு சங்கம்
முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் தான் வக்கிர புத்தி. இந்த வக்கர புத்தியை மற்ற முடியாது… தலைவர் இறந்த நாளிலே…. நினைவு நாளிலே அதை வைக்கிறேன் என்று சொல்லுகிறார்கள்…. உங்களுக்கு எங்க போனது அந்த அறிவு ? தயாரிப்பு சங்கமும், நடிகர் சங்கமும்…. தயவு செய்து தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் மறு பரிசீலனை செய்து….. வேறு ஒரு நாளில் வைக்கணும்… புரட்சித்தலைவர் ரசிகர்கள்…
புரட்சித்தலைவர் பக்தர்கள்….. கோடான கோடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்…. அத்தனை பேரும் வேதனை படக்கூடிய….. துயரப்படக்கூடிய நாள். அந்த நாளில் ஒரு கொண்டாட்டமா? இதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள், பக்தர்கள், ரசிகர்களின் கேள்வி என தெரிவித்தார்.