தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் இதையெல்லாம் தாண்டி இப்போது புதிதாக ஒரு காமெடி விளையாட்டுக்கு வந்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனியாக தேர்தலில் நின்னா தமிழ்நாட்டில் என்று…. ஏன் பயம் வந்து விட்டதா ? ரொம்ப பயம் வந்து விட்டதா? பார்த்து குளிர் காய்ச்சல்,  ஜன்னி வந்து விடப் போகுது. உங்களுடைய அப்பா கலைஞர் கருணாநிதி அவர்கள் என்ன சொன்னார்கள் ?

எங்கேயா பாரதிய ஜனதா கட்சி இருக்கு.  இங்க  ஒன்றும்,  அங்கு ஒன்று இருக்கிறது என்று… இன்றைக்கு பையன் நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 30 நிமிஷம் பேசினால், 29 நிமிடம் பாரதிய ஜனதா கட்சியை பற்றி தான் பேசுகிறார்.

அதனால் முதலமைச்சருக்கு சில விஷயத்தை நான் நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கின்றேன். 2021 இல் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். ஜஸ்ட் பாஸ் அகி வந்தீங்க. 12 கட்சிகளை கூட்டணி கட்சிகளாக  துணையோடு உங்களால் நடக்க முடியாமல்…  நிற்க முடியாமல்…  அவர்களை பிடித்துக் கொண்டு இன்றைக்கு ஆட்சியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதிலும் கூட தமிழகத்தில் ஜாதி அரசியலைக் கொண்டு வந்தது திராவிடம் தான்.

அந்த ஜாதி கட்சிகளை உருவாக்கி, அந்த ஜாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்து,  அந்த கட்சிகளோடு இன்றைக்கு ஆட்சிக்கு வந்திருக்கிறார். தமிழகத்தில் எல்லா கட்சிகளோடு கூட்டணி வைத்த பெருமை இருப்பது திமுகவுக்கு மட்டும் தான். யாரையும் விட்டு வைக்கவில்லை, எல்லா கட்சிகளுடனும்  கூட்டணி, நீங்களே யோசித்துப் பாருங்கள் என தெரிவித்தார்.