
சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் குறித்த கேள்விக்கு நேரடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்தார்.
ரஃபேல் வாட்சில் உளவு பார்க்கும் வசதி இருப்பதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ரஃபேல் வாட்சை செய்தியாளரிடம் அண்ணாமலை கழற்றி கொடுத்தார். இதனால் செய்தியாளர்களுக்கும் அண்ணாமலை வாக்குவாதம் ஏற்பட்டது.
youtube சேனல் நடத்துபவர்களுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது என்று பத்திரிகையாளரை நோக்கி கேள்வி எழுப்பிய அண்ணாமலை, ஈஷா மையத்திலிருந்து வெளியேறிய பெண் கொலை செய்யப்பட்டதற்கான கேள்வி குறித்து கேட்ட போது ஆதாரம் கேட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.