தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரை நோக்கி உள்கட்சி விவகாரம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அடுத்தடுத்து செய்தியாளர்களில் கேள்விகளால் தடுமாறிய அண்ணாமலை செய்தியாளர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் செய்தியாளருக்கும், அண்ணாமலைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பிரபல தனியார் சேனல் செய்தியாளர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் அளிக்க்காமல் நழுவினார்.

தான் காட்டியிருந்த ரஃபேல் வாட்சுக்கு ரசீது கேட்டிருந்த நிலையில், ரபேல் வாட்சை செய்தியாளரிடம் கழற்றி கொடுத்து ஆராய சொன்னார் அண்ணாமலை. வாட்ச் ரசீது குறித்த கேள்வி கேட்டதற்கு,  அதில் ஒட்டு கேப்பு கருவி உள்ளதா ? என்று எதிர் கேள்வி எழுப்பினார் அண்ணாமலை.  ஒட்டு கேப்பு கருவி குறித்து ஆராய்ந்து வரும்படி பத்திரிகையாளரை வற்புறுத்தினார் அண்ணாமலை. கேள்வி கேட்ட இரண்டு தொலைக்காட்சி செய்தியாளர்களை ”ரூமுக்கு வாங்க பஞ்சாயத்தை வச்சுக்கலாம்” என பேசினார் அண்ணாமலை. அண்ணாமலை பேசியது செய்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.