தமிழகத்தில் திமுக அரசு கடந்த 2021ம் வருடம் மே மாதம் பொறுப்பேற்றது. இதையடுத்து பலமுறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இதுவரையிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றமானது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது .இதனால் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ரூபாய்.1000 வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.