திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய இளைஞர் அணிக்கு என்று பல சிறப்பு உண்டு… இந்தியாவிலேயே 1980ஆம் ஆண்டு…. இன்றைக்கு அனைத்து இயக்கங்களிலும் இளைஞர் அணி இருக்கிறது… நம்முடைய கழகத்தில் பல்வேறு அணிகள் இருக்கிறது… அனைத்து இயக்கங்களிலும் இளைஞர் அணி இருக்கிறது…. ஆனால் இந்தியாவில் ஒரு இயக்கத்தில் முதல் முறையாக இளைஞர் அணி ஆரம்பித்தது என்றால்,  அது திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

அதை துவக்கி வைத்தவர் நம்முடைய தலைவர் அவர்கள். இந்த வரலாறு எல்லாம் உங்களுக்கு தெரிய வேண்டும். அதேபோல நம்முடைய முத்தமிழ் கலைஞர் அவர்களும் நிறைய முறை பாராட்டி இருக்கிறார்கள். இயக்கத்தில் எத்தனையோ அணிகள் இருக்கிறது. 22 அணிகள் இருக்கிறது. இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி என்று பல்வேறு அணிகள் இருக்கிறது. ஆனால் அத்தனை அணிகளிலும் முதுமையான அணி எது என்றால் ? அது இளைஞர் அணி என்று எப்பொழுதுமே  கலைஞர் பாராட்டி இருக்கிறார்…  நம்முடைய தலைவர் அவர்களும் பாராட்டி இருக்கிறார்கள்.

தேர்தலுக்கு முன்பு பல்வேறு இயக்கங்கள் மாநாடு நடத்தும். ஆனால்  அணிகள் சார்பாக நடத்த மாட்டார்கள்…  இயக்கங்கள் தான் நடத்தும்.  நம்முடைய தலைவர் அவர்கள் முதல்முறையாக 2024 தேர்தல் வரப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு  முன்பாக நம்முடைய இளைஞர் அணிக்கு இப்படி மிகப்பெரிய ஒரு பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்த மாநாட்டை நாம் எழுச்சியாக நடத்தி காட்டுவோம் என்ற நம்பிக்கையில் இளைஞர் அணி இடம் அந்த பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள்.

என்னை நம்பி கொடுக்கவில்லை… இங்கு வந்திருக்கக்கூடிய உங்களை நம்பி…. நீங்கள் அதை செய்து காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையோடு கொடுத்திருக்கிறார்கள்…  எனவே நீங்க  மிகப் பெரிய வெற்றி மாநாடாக மாற்றி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது….  நம்முடைய மாநாட்டில்….. நம்முடைய இயக்க வரலாறுகள் சொல்லப்படும்…..  நம்முடைய இயக்கத்தினுடைய கொள்கைகள் பேசப்படும்….இரண்டரை ஆண்டுகால ஆட்சியினுடைய  சாதனைகள் சொல்லப்படும்…  எத்தனையோ வாக்குறுதிகள் கொடுத்து,  அதெல்லாம் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,  தலைவர் அவர்கள் செயல்படுத்துகிறார்கள்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்தார்.