SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயற்குழு உறுப்பினர் KKSM தெகலான் பார்கவி, இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்கள் பதைபதைப்போடு இருக்கிறார்கள். மதச்சார்பின்மையை பற்றி பேசுவதற்கு எஸ்டிபிஐ கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது.. நாங்கள்  சொல்லுவோம். எஸ்டிபிஐ கட்சியைத் தவிர வேறு யாருக்கும் மதச்சார்பின்மையை பற்றி பேசுகின்ற தகுதி வேறு எந்த கட்சிக்கும் இருக்க முடியும்.. எஸ்டிபிஐ கட்சிக்கு இல்லை என்று சொன்னால்.. 15 ஆண்டுகாலமாகிறது.

எஸ்டிபிஐ கட்சியினுடைய தலைவர்கள் ஏதாவது ஒரு மதத்தை பற்றி தவறாக பேசிய வரலாறு உண்டா?.. அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா?.. எஸ்டிபிஐ கட்சி தொண்டர்கள், தலைவர்களுடைய பேச்சுக்களால் எங்காவது, ஏதாவது ஒரு சிறு அசம்பாவிதங்கள் எங்கேயாவது ஏற்பட்டு இருக்கிறதா?. எஸ்டிபிஐ கட்சி இந்துக்களுக்கு எதிராக அல்ல..

இந்துக்களினுடைய பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற ஏய்த்து பிழைத்துக் கொண்டிருக்கின்ற பாரதிய ஜனதாவிற்கும், ஆர் எஸ்.எஸ் கும்பலுக்கும் எதிரான கட்சி.. இந்துக்களாக இருந்தாலும், கிறிஸ்தவர்களாக இருந்தாலும், எந்த சமயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிற மகத்தான பேரியக்கம்.. சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என தெரிவித்தார்.