செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், கருணாநிதி சிலையை வைப்பதற்கு நிதி நிறைய இருக்கிறது. கருணாநிதி பெயரில் ஒரு பெரிய ஸ்டேடியத்தை கட்டி,  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கும்,  கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் ? எதைப் பார்த்தாலும் கருணாநிதி பெயர் வைப்பது…  அதற்கெல்லாம் செலவு பண்ணுவதற்கு காசு இருக்கிறது. சேலத்தில் பெரிய மாநாடு. அதில் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக அறிவிக்கப் போகிறார்கள்.

எல்லா மந்திரிகளும் அங்க போய் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடம்பர மாநாடு  சேலத்தில்…  அரசியல் இயந்திரம்….  கட்சி இயந்திரம் எல்லாம் முழுக்க அங்க வேலை செஞ்சாங்க….  புயல் மழை நிவாரணத்துக்கு போகல….  மந்திரிகள் எல்லாம் அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்…

இவர்களுக்கு இதற்கெல்லாம் பணம் இருக்கிறது. ஆனால் பொங்கல் தொகுப்பு மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றால், அதற்க்கு பணம் இல்லை,  நிதி நெருக்கடி இருந்தால் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்…  அந்த ஆயிரம் ரூபாயும் நேரடியாக வாங்கிகணக்கில் வரவு வைக்கவில்லை… அந்த 1000 ரூபாயை ரேஷன் கடையில் வாங்கிக்கணும்…  எந்த காலத்தில் இருக்கிறீங்க..

அதிலும்  ஊழல்…. கடந்த காலங்களில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட பொழுது,  அந்த பொருட்கள் தரமாக இல்லை என்று குற்றச்சாட்டு எங்களைப் போன்றவர்கள் எழுப்பினோம். அந்த வெல்லம் ரொம்ப மோசமாக இருந்தது. அதில் வந்த முந்திரி,  திராட்சை எல்லாம் வடநாட்டில்எங்கெங்கோ  பர்ச்சேஸ் பண்ணி இருக்கிறார்கள். அதில் ஊழல், தரம் இல்லை என்று சொன்னோம். ஆரம்பத்தில் மறுத்தார்கள் பிறகு,  ஸ்டாலினே ஒரு கமிட்டி போட்டு தரம் இல்லாத பொருட்களை விநியோகித்த அந்த நிறுவனங்களையெல்லாம் பிளாக் லிஸ்டில் வைத்தார்கள்.

அதற்கு பிறகு பார்த்தீர்கள் என்றால்,  மறுபடியும் அதே பொருட்கள் தான் வழங்கப்படுகிறது. தமிழர்களை ஏமாற்றக்கூடிய ஒரு நிகழ்வாக இந்த அரசாங்கம்….  இன்றைக்கு இதை செய்திருக்கிறார்கள். இந்த பொங்கல் பொருட்களை வழங்குவதில் இந்த பிரச்சனை. அந்த பொங்கல் பொருட்கள் யார்க்கு முதலில் கொடுக்கிறார்கள் என்றால்,  முதலில் யாராவது இஸ்லாமிய பெண்களை கூப்பிட்டு கொடுக்கிறார்கள்.

அவங்க என்ன பொங்கலா கொண்டாடுறாங்க ?  பொங்கல் கொண்டாடுவதற்கு கொடுங்கள்.  அவர்களுக்கு ரம்ஜானுக்கு கொடுங்கள்,  கிறிஸ்துமஸ்க்கு  கொடுங்கள். இதில் ஏன் அரசியல் ?   பொங்கல் பண்டிகையை மதம் மாற்றும் முயற்சியை வன்மையாக கண்டிக்கின்றேன். பொங்கல் தொகுப்பு வழங்குவதில்… பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில்…. பாரபட்சம் காட்டப்பட்டிருக்கிறது. இதற்கும் என்னுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.