பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் சந்திப்பு நேற்று முன்தினம் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றதாக ஜி கே வாசன் தரப்பு உறுதி அளித்து இருக்கிறது. இன்றைய தினம் செய்தியாளர்களை சந்திக்கும் போது ஜி கே வாசன் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். ஜே பி நட்டாவுடன் சந்திப்பு என்பது ஒரு நட்பு ரீதியான சந்திப்பு என தெரிவித்திருக்கிறார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தை பொறுத்தமட்டில் தற்போது தமிழக அரசியல் சூழல் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் தலைவர் ஜிகே வாசனிடம் ஜே பி நட்டா தமிழகத்தில் மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைவதற்கு பாஜக விரும்புகிறது. இதனை நீங்கள் அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளுடன்  கேட்டுப் பாருங்கள் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தை பொறுத்தவரையில் அண்ணாமலை அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை என தெரிவித்திருக்கிறார்.

இருந்தாலும் பாஜக அகில இந்திய தலைமை தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான  விருப்பத்தினை தெரிவித்துள்ளது.   இந்த பேச்சுவார்த்தை என்பது ஜிகே வாசன் மூலம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு வெற்றி கிடைக்கும் என்று அகில இந்திய பாஜக தலைவர்கள் நினைக்கிறார்கள். இருந்தாலும் அதிமுக ஒரு விடாப்பிடியான ஒரு   நிலைப்பாட்டில் இருக்கிறது.  அதிமுக இல்லையென்றால் பாமக உள்ளிட்ட கட்சிகளையாவது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் முயற்சியில் தற்போது பாஜக எடுத்து வருவதாக சொல்ல படுகின்றது.