செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  புரட்சித்தமிழர் எடப்பாடி ஐயா ஆட்சி காலத்திலே கொரோனா  பெரும் தொற்று முன்பாக 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசினுடைய அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலே பணிபுரியும் ஊழியர்களுக்கும் 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும கருணை  தொகையாக வழங்கப்பட்டது.

2023 ஆண்டுக்கான அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் மற்றும் கருணை தொகையாக 20% வழங்க வேண்டும் என திமுக அரசை  வலியுறுத்திருக்கின்றார்கள். ஆனால் விடியா தி.மு.க அரசு எல்லோருக்கும் வழங்காமல் பாரபட்சதோடு ஒரு கண்ணிலே வெண்ணெய்,  ஒரு கண்ணிலே சுண்ணாம்பு என்பதை மிக நயமாக…..  பாமரர்களுக்கும் புரிகிற வகையில்…. சாமானியர்களுக்கும் புரிந்து கொள்கின்ற வகையிலே எடுத்து சொல்லி இருக்கின்றார்கள்…

கூட்டுறவு துறையிலே 10% தான் போனஸ் வழங்கி இருப்பதை வன்மையாக கண்டித்து இருக்கின்றார்கள். ஆனால் இந்த அரசு அதையும் செவிமடுத்து கேட்கவில்லை.இன்னைக்கு  காவேரி உரிமை பிரச்சனையாக இருந்தாலும்,  முல்லை பெரியார் உரிமைப் பிரச்சனையாக இருந்தாலும்… இன்றைக்கு முல்லை பெரியார் 142 அடி உயர்த்தியது நம்முடைய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடங்கி வைத்த சட்டப் போராட்டம்.

காவேரியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்,  காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைத்து தந்தது நம்முடைய புரட்சித் தமிழர் அய்யா எடப்பாடி ஆட்சி காலத்தில்  தான், அதற்கான தீர்வு காணப்பட்டது. 50 ஆண்டுகால காவேரி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.’

இதன் மூலமாக தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC  காவிரி நீரை கர்நாடக அணையில் இருந்து திறக்க வேண்டும். நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போன காரணத்தினாலே,  தமிழகத்திற்கு உபரி நிறை வழங்காமல் கர்நாடக அரசு ஏமாற்றி வருகிறது.  ஆகவே இந்த உபரிநீரை… நமக்கு உரிய நீராக… உரிய உரிமையாக…  கர்நாடக அரசு கருதுகிறது. ஆனால் நாம் நம்முடைய உரிமையை கேட்கின்றோம் என தெரிவித்தார்.