
உத்திரபிரதேச மாநிலம் சூரப்பூர் பகுதியில் வசித்து வரும் மக்கள் மற்றும் வணிகர்கள் கடும் மின் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திர பிரதேச மின்துறை அமைச்சர் நேற்று ஜான்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சூரப்பூர் பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மின்சார பற்றாக்குறை குறித்து மனு அளித்தனர். வணிகர்கள் 5 MVA மின்மாற்றி திறனை 10 MVA யாக மாற்ற வேண்டும். பழைய மின் கம்பிகளை புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதோடு ஒரு நாளில் 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. திடீர் மின்வெட்டுகளால் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், பல இடங்களில் மின்கம்பிகள் பழுதடைந்துள்ளதாகவும் வணிகர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கவலைகளை கேட்ட எரிசக்தி அமைச்சர் ஏ.கே.சர்மா “ஜெய் ஸ்ரீ ராம்” மற்றும் “ஜெய் பஜ்ரங் பலி” என்று கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘बिजली नहीं आ रही..’
UP के ऊर्जा मंत्री से लोगों ने कहा ’24 घंटे में सिर्फ 3 घंटे बिजली आती है’, तो मंत्री ने लगाए ‘जय श्री राम के नारे’ #UttarPradesh | #ViralVideo pic.twitter.com/kbcZiFT54d
— NDTV India (@ndtvindia) July 10, 2025
மேலும் அமைச்சரின் பதிலில்லாத நடவடிக்கையை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் சூரப்பூரில் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மின் தட்டுப்பாட்டு நிலவுவதால் மின்விநியோகத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் தற்போது அரசுக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மின்துறை அமைச்சர் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுப்பார் என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.