மக்களவையில் 2022-23ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார். இதனால் அனைவரும் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், அது குறித்த வரலாறு பற்றி இங்கே தெரிந்துக்கொள்வோம்.

பிரெஞ்சு சொல்லான “Bougette” என்ற வார்த்தையில் இருந்து திரிந்து வந்தது தான் “பட்ஜெட்”. பிரெஞ்சில் “Bougette” எனில் தோலால் செய்யப்பட்ட பர்ஸ் (அ) பையைக் கூறிக்கும். ஆண்டின் வரவுச்செலவு தொடர்பான ஆவணங்களை தோலால் ஆன பைகளில் கொண்டு செல்வதால் பட்ஜெட் எனும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நம் நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் 1860ம் வருடம்  இந்தியாவில் பட்ஜெட் முறையை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய கவுன்சிலின் நிதி உறுப்பினராக இருந்து வந்த ஜேம்ஸ் வில்சன் என்பவரின் அறிவுறுத்தலின் படி இந்தியாவின் முதல் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டது.

அதன்படி பிப்ரவரி 18, 1869 ஆம் வருடம் இந்தியாவின் முதல் பட்ஜெட்டைஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார். நடப்பு ஆண்டு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில், என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்று அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்