மத்திய அரசின் 2022-23ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை(பட்ஜெட்) புதன்கிழமை (பிப்,.1) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 4வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளாா். தற்போது பட்ஜெட்டின் வரலாறு மற்றும் பல சுவாரஸ்ய தகவல் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

வரலாற்று சிறப்பு தாக்கல் செய்யப்பட்ட நாள் மற்றும் ஆண்டு தாக்கல் செய்தவர்

# இந்தியாவுக்கான முதலாவது பட்ஜெட் ஏப்ரல் 7, 1860 பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனத்தால் அந்நாட்டு அரசி விக்டோரியா முன்னிலையில் சமா்ப்பிக்கப்பட்டது.

# இதையடுத்து சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட் நவம்பா் 26,1947 ஆா்.கே.சண்முகம் செட்டி.

# நீண்ட பட்ஜெட் உரை பிப்,.1, 2020 (2 மணிநேரம் 42 நிமிஷங்கள்) நிா்மலா சீதாராமன்.

# பட்ஜெட் உரையில் அதிகமான சொற்கள் 1991 (18,650 சொற்கள்) மன்மோகன்சிங், 2018 (18,604 சொற்கள்) அருண்ஜேட்லி.

பட்ஜெட் உரையில் குறைவான சொற்கள் 1977 (800 சொற்கள்) எச்.எம்.படேல்.

முதல் காகிதம் இல்லா பட்ஜெட் 2021-22 நிா்மலா சீதாராமன்

சுவாரஸ்யங்கள்

அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவா்கள்

#மொராா்ஜி தேசாய்-10 முறை, ப.சிதம்பரம்-9 முறை, பிரணாப்முகா்ஜி, யஷ்வந்த் சின்ஹா-8 முறை

# பட்ஜெட் மொழி 1955 வரை ஆங்கிலத்தில் மட்டும்.

# பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் இந்திராகாந்தி (1970-71)

நிா்மலா சீதாராமன்- முழு நேர நிதியமைச்சா் (2019)

ரயில்வே பட்ஜெட் 2017 வரை தனியாக தாக்கல். அதன்பின் பொதுபட்ஜெட்டுடன் இணைப்பு.