திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜக இந்தியை திணிப்பதை வழக்கமாக செய்து வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி இந்தியை வைத்து மற்ற மொழிகளை அழிக்க பார்க்கிறது. இந்தி மொழியை அதிகாரம் செலுத்தும் மொழியாக மாற்றுவதோடு இணைப்பு மொழியான ஆங்கிலத்தை நீக்கி இந்தியை முழுமையான மொழியாக மாற்றுவதற்கான வேலைகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்தியை எதிர்த்து தமிழுக்காக உயிர் நீத்த தமிழர்களின் நாள் இது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும். அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தமிழகத்திற்குள் வரவில்லை. பச்சை துண்டு போட்டுவிட்டு தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்து விட்டார்கள். தமிழக மக்களுக்கு துரோகம் செய்த ஆட்சி அதிமுக. நாங்கள் சட்டமன்றத்தில் நீட், வேளாண் மற்றும் குடியுரிமை உள்ளிட்டவை களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தோம். வாரிசுகள் என்று சொல்பவர்களுக்கு நாங்கள் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறோம். நாங்கள் கோட்பாடுகளுக்கும் கொள்கைகளுக்கும் வாரிசுகள் தான் என்று கூறினார்.