நாட்டில் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு, வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் சம்பளம் வர்க்கத்தினர், வரிக்குறைப்பு மற்றும் ஸ்லாப் விகிதங்களில் குறைப்பு உட்பட பல சலுகைகளானது இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அடிப்படையில் வருமானவரி விலக்கை ரூபாய்.2.5 லட்சத்திலிருந்து, குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை உயர்த்தும் என மாத சம்பளம் பெறும் வர்க்கத்தினர் எதிர்பார்க்கின்றனர். இதேபோன்று வீட்டு வாடகை கொடுப்பனவை(HRA) கணக்கிடுவதற்கு மெட்ரோ நகரங்களின் வரையறையில் திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்போது டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை போன்றவை மட்டுமே மெட்ரோ நகரங்களின் கீழ் இருக்கிறது. இதில் பெங்களூருவை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர். அதோடு தற்போது தனி நபருக்கான சொத்துக்களுக்குரிய வீட்டுக் கடனில் ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த வரம்பு பட்ஜெட்டில் ரூபாய்.5 லட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கின்றனர். அதன்பின் தற்போது கல்விக் கடனில் மட்டும் வட்டி கழிப்பதற்கான வரம்பு இருக்கிறது. மேலும் இந்த பட்ஜெட்டில் தனி நபருக்கான கடன்களில் தளர்வுகள் இருக்குமென மாத ஊதியம் வாங்குவோர் எதிர்பார்த்து வருகின்றனர்.