அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ நகரில் தாமஸ் மோஸ்லி (21) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பஷூன் ஜொஃப்ரி (20) என்ற மனைவியும், டெய்லன்‌ மோஸ்லி (2) என்ற குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் தாமஸ் மோஸ்லி தன்னுடைய மனைவியை பலமுறை கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்ததோடு மகனை முதலையின் வாயில் கொடுத்துள்ளார். அவர் தற்போது வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் மனைவி மற்றும் மகனை எதற்காக கொலை செய்தார் என்ற காரணத்தை காவல்துறையினரிடம் இதுவரை சொல்லவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது தாமஸ் மோஸ்லியின் மனைவியின் சடலம் குடியிருப்பில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. ஆனால் 2 வயது மகனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சிறிய தூரம் உள்ள ஒரு குளத்தில் முதலை ஒன்று வாயில் வித்தியாசமான பொருளுடன் இருந்துள்ளது. இதனால் போலீசார் முதலையை துப்பாக்கியால் சுட தன் வாயில் இருந்த குழந்தையை முதலை விட்டுள்ளது. முதலை கருணை கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தை எப்படி அதன் வாயில் சென்றது என்ற விவரம் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது