விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத்தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்வதேச சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பி இருக்கின்ற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழில தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்த சூழலில் தமிழீல தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்ற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

தமிழீல மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார் என்பதை தங்களுக்கு தெரிவிக்கின்றேன். தமிழ் ஈழ மக்களும்,  உலக தமிழர்களும் ஒன்றுபட்டு அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன் வருமாறு வேண்டிக் கொள்கின்றேன். விடுதலைப்புலிகள் வலிமையாக  இருந்த காலம் வரை இந்தியாவிற்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் கால் எடுத்து வைக்க அவர்கள் அனுமதிக்கவில்லை.

இந்தியாவிற்கு எதிரான நாடுகள் எதுவாக இருந்தாலும், எந்த காலத்து கட்டத்திலும் அவர்களின் உதவியை பெறுவது இல்லை என்று தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். இப்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவுக்கு எதிரான தலைமாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும்,  இந்து மாகடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கிய  அபாயம் இருப்பதை எண்ணி பார்த்து அதனை தடுக்கும் வகையிலான ஒரு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசை வேண்டி கொள்கின்றோம்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும்,  தமிழக மக்களும் ஒன்று பட்டு நின்று தமிழின தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். பிரபாகரன் அவரின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பையின் மூலம் நான் அறிந்த செய்திகளை,  அவருடைய நண்பர்கள் என்ற முறையில் இங்கே வெளியிடுகின்றேன். பிரபாகரன் எங்கே இருக்கிறார் ? எப்போது வருவார் ?  என்பது எங்களுக்கு மட்டுமல்ல… எனக்கும், உலகத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய தமிழர்களுக்கும் ஆவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

ஆனால் விரைவில் அவர் வெளிப்படுவார். அதை உலகம் அறிந்து கொள்ளும். இந்த உண்மையை அறிந்து கொள்வதற்காக தான் சிங்கள அரசாங்கத்தின் உளவுத்துறையும், உலக நாடுகளின் உளவுத்துறைகளும் விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.  பிரபாகரனின் மனைவி, மகள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். சர்வதேச சூழல் இன்று அதற்கு சாதகமாக இருக்கிறது.  எந்த சிங்கள மக்கள் ராஜபக்சையை ஆட்சியில் பீடத்தில் உட்கார வைத்தார்களோ,  அதே சிங்கள மக்கள் அவருக்கு எதிராக கொதித்து எழுந்து போராடி அவருடைய ஆட்சியை வீழ்த்தி இருக்கிறார்கள். சிங்கள மக்கள் மனதில் இப்போது தான் உண்மை புரிய தொடங்கியிருக்கிறது. இதைவிட நல்ல சூழலில் வேறு என்ன இருக்க முடியும் ? என தெரிவித்தார்.