மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (100 நாள் வேலைத்திட்டம்) அதே பெயரிலேயே மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி சட்டசபையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தத் தனித் தீர்மானத்தைப் பேரவையில் தாக்கல் செய்தார். இந்தத் திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரையே தொடர்ந்து சூட்ட வேண்டும் எனத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் வேலைக்கான வழிமுறைகளை அந்தந்த மாநில அரசுகளே வகுத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதும் இத்தீர்மானத்தின் முக்கியக் கோரிக்கையாகும். மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெயரை மாற்றிய மத்திய அரசு அந்த திட்டத்தை 125 நாட்களாக உயர்த்துவதாக அறிவித்த நிலையில் இனி மாநில அரசும் அதற்கு நிதி பங்களிப்பு வழங்க வேண்டும் என முன்னதாக அறிவிப்பு வெளியிட்டு அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.
