நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது.உலகளாவிய பெரும் தொழில் அமைப்புக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என உதகை பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆரன் ரவி பேசியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று தொழிலதிபர்களை சந்தித்து முதலீடை ஈர்த்து வந்ததாக தமிழக ஆளும் அரசு பெருமையாக பேசி வந்த சூழலில் ஆளுநரின் இந்த கருத்து ஆளும் அரசை சீண்டி உள்ளது.