நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பாஜக இல்லாத மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் அந்தந்த மாநில அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றார்கள் என மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றார்கள். மத்திய பாஜக அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் பொறுப்பாக உள்ள மாநில அரசு குறித்து விமர்சனங்களையும்,  கேள்விகளையும் முன் வைத்து வருவதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு காரணம்.

பொதுவாக மாநில ஆளுநர்கள் மக்களால் தேர்தெடுக்கப்படும் மாநில அரசின் முடிவுகளில் தலையிடக்கூடாது என்று அரசியலமைப்பு சட்டம் சொன்னாலும் கூட இவர்கள் ஆளும் அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருவது தொடர் கதையாகி வருகிறது தமிழகத்திலும் கூட இதே நிலைதான் நீடிக்கின்றது.

தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து தமிழக அரசு செயல்பாடுகளை விமர்சனம் செய்து வருவது ஆளும் கூட்டணி கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒவ்வொரு முறையும் ஆளுநரின் கருத்துக்கு  அரசின் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தாலும் ஆளுநர் ஆர்.என் ரவி எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகின்றார்.

தற்போது கூட தமிழக ஆளுநர் பேசியுள்ளது தமிழக முதல்வர் ஸ்டாலினை அதிர்ச்சடைய வைத்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பல தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி தமிழகம் திரும்பினார். இதனை ஆளும் அரசு அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி நிர்வாகிகள் கொண்டாடி  வரும் நிலையில்,

தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி, தமிழக அரசு, அமைச்சர்கள், அதிர்ச்சி அடையும் வகையில் கருத்து ஒன்றை தெரிவித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதகை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி நாம் கேட்பதாலோ,  நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

ஆளுநர் பேசிய இந்த கருத்துக்கு ஆதரவாக பேசிவரும் திமுக எதிர்ப்பு நிலையில் உள்ள அதிமுக மற்றும் பாஜகவினர்  முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் வேஸ்ட் தானா ? என்று கேள்வியை எழுப்பி அரசியல் செய்து வருகின்றனர். இது ஆளும் அரசின் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என  திமுக கூட்டணி கட்சியினரையும் கோபமடைய செய்துள்ளது.