தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 12,000 ஆசிரியர் காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் இந்த அரசு பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது.

தமிழக கல்வித்துறையின் வரலாற்றில் முதல் முறையாக போதுமான தலைமை ஆசிரியர்கள் கூட இல்லை. அனைத்து ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்பினால் மட்டுமே எதிர்காலத்தில் மாணவர்களின் படிப்பில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. எனவே இந்த அரசு போர்க்கால அடிப்படையில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.