சென்னை மாநகரில் இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் மக்களுக்கு பெரிய உதவியாக உள்ளது. மெட்ரோவில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில், மெட்ரோ ரயில் டிக்கெட் வாட்ஸ்ஆப்பில் பெரும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறு வாட்ஸ் அப்பில் ரயில் டிக்கெட் புக் செய்வதற்கு முதலில் ‘9650855800’ என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘Hi’ என டைப் செய்து அனுப்ப வேண்டும். பின்னர், இந்தி அல்லது ஆங்கில மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதனையடுத்து ‘Buy Ticket’ என்ற பட்டனை தட்டவும். நீங்கள் செல்ல வேண்டிய ரயில்நிலைய விவரங்களை அங்கு நிரப்ப வேண்டும். விவரங்களை உறுதிசெய்த பிறகு, கட்டணம் செலுத்த வேண்டும். பிறகு டிக்கெட் QR குறியீடு காட்டப்படும். இவற்றை மெட்ரோ ஸ்டேஷனில் ஸ்கேன் செய்து உள்ளே செல்லலாம்.