இலங்கையில் தமிழீழ போர் நடந்த போது அப்போது அதிபராக இருந்த மகேந்தா ராஜபக்சே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலை புலிகள் அழிக்கப்பட்டன என அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து அடிக்கடி பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர் மீண்டும் வருவார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்தியால் பரவுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று பழ. நெடுமாறன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். அவர் மீண்டும் வருவதற்கான காலமானது கைகூடி இருக்கிறது. அவருடைய ஒப்புதலோடு இந்த தகவலை நான் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

பழ.நெடுமாறனின் இந்த கருத்தால் இதனால் உலக அளவில் ஒரு பெரும் பரபரப்பான சூழானது ஏற்பட்டது. இந்நிலையில்  பிரபாகரன் தற்பொழுது உயிருடன் இல்லை என கூறிய இலங்கை ராணுவம், பழ.நெடுமாறனின் கருத்தை திட்டவட்டமாக மறுத்து இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி கட்டப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் இலங்கையில் ராணுவ செய்தி தொடர்பாளர் ரவி ஹெரத் தெரிவித்து இருக்கிறார்.

தற்போது இதுபோன்று வெளியாகும் தகவல்கள் தேவையில்லாத பதற்றத்தை உருவாக்க திட்டமிட்டும் பரப்பப்படும் வதந்திகளை எனவும், பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லாத சூழ்நிலையில் சில குழுக்கள் இலங்கை பொருளாதார நெருக்கடி, சிக்கல்கள் இது போன்ற தேவையற்ற தகவல்களை பரப்பி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். தற்பொழுது திடீர் குழப்பம் ஏற்படுவதற்கான காரணம் என்ன ? இலங்கையில் இருந்து ஏதேனும் குழுக்கள் இதுபோன்று தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்துவதாக தெரிவித்து இருக்கிறார்.