முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகனான பரிதி இளம்சுருதி திருமணத்தினை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னை கொரட்டூரில் நடத்தி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “தன் தந்தை கருணாநிதி 5 முறை முதலமைச்சராக பதவி வகித்ததாகவும், அவரது பேனா எப்போதெல்லாம் தலைகுனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

அதோடு மதுரையில் இருந்து செங்கலை எடுத்து வந்து தமிழகம் முழுவதும் உதயநிதி கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார். வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக 2-வது முறையும் உதயநிதி செங்கல்லை எடுத்துக்கொண்டு வலம் வரப்போகிறார். தமிழகத்தை போல் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவிற்கே விடியல் வரும் என அவர் பேசினார்.