ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றுடன் பரப்புரை முடிவடைகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஒருபுறம் உச்சக்கட்டம் அடைந்திருக்க மறுபுறம் பட்டுவாடா பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலைக்கு பிறகு வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.