அ.தி.மு.க பொதுக் குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், அந்த பொழுக்குழு செல்லும் என அறிவித்து உள்ளது. இது ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பில் அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளனர்.

இத்தீர்ப்புக்கு பின் பலரும் OPS-ன் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டதாகவும், அவருக்கு இனி அதிமுகவில் இடமில்லை எனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து வைத்திலிங்கத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு காட்டமாக பதிலளித்த வைத்திலிங்கம், ஓபிஎஸ் புதுக்கட்சி தொங்குவார் என அரசியல்வாதிகள் சொல்லமாட்டார்கள், பைத்தியக்காரர்கள் தான் பேசுவார்கள் என சாடியுள்ளார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் மக்களை சந்திக்க இருப்பதாகவும் அவர் அறிவித்து உள்ளார்.