இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது. பல அடுக்கு பாதுகாப்பு திறன் கொண்ட இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, எதிரிகள் ஏவுகணைகளையும், வான் வழித் தாக்குதல்களையும் தடுக்க உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனை, நாட்டின் பாதுகாப்பு துறையில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. இந்த உயர் தொழில்நுட்ப ஆயுத அமைப்பு எதிர்வரும் காலங்களில் இந்திய ராணுவத்துக்கு ஒரு வலுவான ஆதரவாக அமையும் என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
