சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தில் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று வார தொடக்கத்தில் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,01,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு கிராம் 13,833 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,10,664 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் என்று கிராமுக்கு 8 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெளி 2,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
