தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் பிற கட்சி இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. சமீப காலமாக மாற்றுக் கட்சியில் இணைந்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் திருவள்ளுவர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளரும் முன்னாள் நகர் மன்ற செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் தற்போது அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கிட்டத்தட்ட 39 வருடங்களாக அதிமுகவில் பணி செய்த நிலையில் தற்போது திடீரென விலகியது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதாவது தொடர்ந்து மாவட்ட தலைமை தன்னை புறக்கணித்து வருவதாகவும் இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் முறையிட்டும் அவர் நடவடிக்கை எடுக்காததால் மிகுந்த வேதனையோடு கட்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார். மேலும் கட்சி வளர்ச்சி பாதையில் இருந்து விலகி வீழ்ச்சி பாதையில் செல்வதாகவும் கூறினார்..