நேபாள நாட்டில் சமீபத்தில் பேஸ்புக், youtube, உள்ளிட்ட 26 சமூக வலைதள செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தற்போது அந்த நாட்டில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. அதாவது சமூக வலைதள செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியும், ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை வெடி குண்டுகள் வீசியும் வன்முறையை தடுக்க முயற்சி செய்கிறார்கள்.

இந்த போராட்டத்தின் போது பெரும் வன்முறை ஏற்பட்டதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு இளைஞர்கள் சிலர் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற வாயிலின் மீது ஏறி இளைஞர்கள் சிலர் தீவைத்து எரித்த நிலையில் அந்த இடமே பற்றி எரிகிறது. மேலும் இதே போன்று நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளதால் ஆங்காங்கே பரபரப்பான சூழல் நிலவுகிறது.