பிரிட்டனில் 49 வயது வாஸ்குலர் சர்ஜனான நீல் ஹாப்பர், தனது கால்களை ட்ரை ஐஸ் மூலம் உறைய வைத்து, பின்னர் அவை அகற்றப்பட வேண்டிய நிலைக்கு தள்ளியதாக இளைஞர் குற்றம்சாட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் மருத்துவ உலகை உலுக்கியுள்ளது. இந்த செயல், பாலியல் ஆசை (sexual obsession) காரணமாகவும், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காகவும் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கால்கள் அகற்றப்பட்ட பிறகு, செப்ஸிஸ் (கடுமையான தொற்று) காரணமாக இழப்பு ஏற்பட்டதாக பொய்யாகக் கூறி, அவர் 4.66 லட்சம் பவுண்டுகள் (சுமார் 5 கோடி ரூபாய்) இன்சூரன்ஸ் தொகையை பெற்றார். இந்த பணத்தில் ஆடம்பர கேம்பர்வேன், ஹாட் டப், வீட்டு புதுப்பிப்பு உள்ளிட்டவற்றை அவர் செய்தார்.
இந்த சம்பவம், Eunuch Maker என்ற இணையதளத்துடன் ஹாப்பருக்கு இருந்த தொடர்பை வெளிப்படுத்தியது. இந்த தளம், மோசமான பாலியல் உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு பெயர் பெற்றது, மேலும் இதன் நிர்வாகி மாரியஸ் குஸ்டாவ்சன் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
கடந்த 2013 முதல் ராயல் கார்ன்வால் மருத்துவமனையில் பணியாற்றிய ஹாப்பர், 2023 மார்ச்சில் கைது செய்யப்பட்டு, மருத்துவ பதிவேட்டில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அவரது செயல் நோயாளிகளின் பாதுகாப்புடன் தொடர்பில்லை என்று மருத்துவமனை தெரிவித்தாலும், சில முன்னாள் நோயாளிகள் தங்கள் சிகிச்சை குறித்து சட்ட ஆலோசனை பெறுகின்றனர். ட்ரூரோ கிரவுன் கோர்ட்டில் 32 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஹாப்பர், பெற்ற இன்சூரன்ஸ் பணத்தை திருப்பி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளார்.
