திமுக IT Wing தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் கூறி இருப்பதாவது கூட்டணிக்கு ஆள் வராத விரக்தியில் வாயிக்கு வந்ததை உளரும் பழனிச்சாமிக்கு நாவடக்கம் தேவை! இல்லையென்றால் நாவடக்கம் செய்யப்படும். எதிர்க்கட்சித் தலைவர் தன் அரசியல் எதிர்காலம் அஸ்தமனம் ஆகிவிட்டது என்பதால் கண்ணியம் தவறி, அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் மாநிலத்தின் முதலமைச்சரை ஒருமையில் பேசுகிற அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டார்.
அரசியல் எதிர் துருவங்களாயினும் ஒருபோதும் அவர்களை ஒருமையில் விளிக்கும் பழக்கம் தமிழ்நாட்டு அரசியல் வெளியில் இல்லை அப்படியானதொரு சூழலில் இப்படியொரு அநாகரீக அரசியல்வாதியாக அம்பலப்பட்டு நிற்கிறார் பழனிசாமி. கழகத் தலைவர் அவர்களை ஒருமையில் பேசிவரும் பழனிசாமிக்கு கழக தகவல்தொழில்நுட்ப அணியின் கடுமையான கண்டனங்கள். நாங்கள் களத்தில் இறங்கினால் பழனிசாமி காணாமல் போவார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
எழுதிக் கொடுப்பவர்களிடம் என்னவென்று கேளுங்கள், அறிக்கையெல்லாம் பிறகு பேப்பரில் எழுதி படிக்கலாம் முதலில் அரசியல் பாலபாடம் கற்றுக்கொள்ளுங்கள் பழனிசாமி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
