அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் அமைச்சர் பொன்முடி வந்துள்ளார். இந்த ரெய்டு பின்னணி தொடர்பாக பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது. 2006-11 வரை பொன்முடி அமைச்சர் பதவி வகித்தபோது 5 செம்மன் குவாரிகளை சட்டவிரோதமாக நெருங்கிய உறவினர்கள் அல்லது பினாமிகளுக்கு ஒதுக்கியதால் அரசுக்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், இதன்அடிப்படையில் அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.