தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் சமீப காலமாக தன்னுடைய பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்துபவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த டியூட் படத்தில் அவரது மூன்று பாடல்கள் அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டதாக இளையராஜாவால் வழக்கு தொடரப்பட்டது. அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்திலும் இசைஞானி இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட தன்னுடைய பாடல்களை நீக்க வேண்டும் என இளையராஜா வழக்கு தொடர்ந்த நிலையில் படக்குழு அதற்காக 7 நாட்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டது. ஆனால் அந்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டு உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் டியூடு படத்தில் கருத்த மச்சான் பாடல் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
