அமெரிக்க அரசு பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பாலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் ஆயுதப்படை பிரிவான மஜீத் பிரிக்கெட்டை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. இந்த அறிவிப்பு பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அஸிம் முனீர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கும் நேரத்தில் வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பு பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க பயணத்தின் போது பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியதாகவும், இது பி எல் ஏ வை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கு வழி வகுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
