பிரேசில் இயற்கையின் அதிசயங்கள் பலரையும் வெகுவாக ஆச்சரியப்படுத்துகின்றன. குறிப்பாக விலங்குகளின் அசாதாரண செயற்பாடுகள் சமூக ஊடகங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில், சமீபத்தில் பரவிய ஒரு வீடியோவில், ராட்சத அனக்கோண்டா ஒன்று வீட்டின் முன்பகுதியில் நகரும் காட்சி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் அந்த வீடியோவில், மிகப்பெரிய அனக்கோண்டா ஒன்று சுவரை ஒட்டி நகர்ந்து, வீட்டு வாசலில் ஊர்ந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதனை பார்த்த பலர், “இது உண்மையா? கற்பனையா?” என்ற சந்தேகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
🔥The absolute size of this monstrous Anaconda crawling onto somebodys porch. pic.twitter.com/x1jb29lgAV
— Viral Mint (@Viralmint6) August 6, 2025
அனக்கோண்டா என்பது தென் அமெரிக்காவின் நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வாழும் மிகப்பெரிய பாம்பு இனமாகும். இவை பெரும்பாலும் அமேசான் காடுகள் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் காணப்படுகின்றன. முக்கியமாக பச்சை அனக்கோண்டா, கரும்புள்ளி அனக்கோண்டா, பொலிவிய அனக்கோண்டா மற்றும் மஞ்சள் அனக்கோண்டா என நான்கு வகைகளில் இவை பகுப்பாக்கப்படுகின்றன.
பாம்பைக் கண்டாலே பதறும் பொதுமக்களுக்கு, இவ்வளவு பெரிய ஒரு அனக்கோண்டா நகரும் காட்சி திகைப்பையும் அச்சத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளது. இயற்கையின் வியப்பூட்டும் சக்தியை உணர்த்தும் இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த வகை நிகழ்வுகள், மனிதர்களில் இயற்கையை மதிக்கும் மனப்பான்மையை வளர்க்கின்றன. இதன்மூலம், விலங்குகளின் வாழ்க்கை முறை, வேற்றுமை மற்றும் அதிசயங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மக்களில் எழுகிறது.
