கனடாவில் தமிழ்ப் பேசும் இந்தியர் மீது தெளிவான இனவெறி ஆதாரங்களுடன் நடந்த தாக்குதல் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்ராறியோ மாநிலம் பீட்டர்பரோவில் உள்ள ஒரு வணிக மாலில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதியினர், ஒரு மாலில் உள்ள கார் பார்க்கிங்கில் தனது வாகனம் சேதப்படுத்தப்பட்டதாக கூறி, கனேடிய நபர்களை சந்தித்து பேசியபோது, அது ஆத்திரமடைந்து தாக்குதலாக மாறியது.
Canadian man harasses Indian couple outside mall, hurls racial slurs at them,
Hatred towards Indians is increasing in Canada. pic.twitter.com/n6RQpLzIIq
— Hindutva Vigilant (@VigilntHindutva) August 9, 2025
வீடியோவில் காணப்படுவது போல, அந்த நபர்கள் “நீ இந்தியன்”, “பெரிய மூக்கு”, “நீ புலம்பெயர்ந்தவன்” போன்ற வார்த்தைகளை ஒலிக்கச் செய்ததோடு, தாக்குதலும், ஆபாச சைகைகளும் செய்துள்ளனர். அதுமட்டுமன்றி, அவர்களில் ஒருவர், “நான் காரிலிருந்து இறங்கி உன்னை கொல்ல வேண்டுமா?” எனக் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்ததும் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கவர்தா ஏரிகள் நகரைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ சட்ட அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். கொலை அல்லது உடல் தீங்கு விளைவிக்கும் வகையிலான மிரட்டல் குற்றச்சாட்டின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை வரும் செப்டம்பர் 16ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
