அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள் பறிபோகும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. மறைமுகமாக பாதிப்புகள் இருக்கும் என நம்புனர்கள் கூறியுள்ளனர். ஏஐ வந்த பிறகு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்தனர்.

குறிப்பாக ஐடி துறையில் ஏஐ அதிகம் செலுத்துவதால் தொழில்துறையில் தங்களை அப்டேட் செய்து கொள்ளாதவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மைக்ரோசாப்ட், கூகுள் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபல நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றி வருகிறது.

இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பின் கீழ் வருவதில்லை என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்த ஐடி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே மாற்றம் காரணமாக 12000க்கும் அதிகமான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கினர். இந்தியாவில் ஐடி துறையில் 5 லட்சம் பணிகள் ஆபத்தில் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளது டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால்  சில அமெரிக்க நிறுவனங்கள் வெளி வேலை திட்டங்களை தள்ளி போட்டுள்ளது.

புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தொடக்கம் தள்ளி வைக்கப்பட்டது. நிதி பற்றாக்குறை வருமான குறைவு ஆகியவை வரும் காலங்களில் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயத்தை மேலும் அதிகப்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.