சமீபத்தில், விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தை இயக்கிய சிறுவர்களை பிடிக்க முயன்ற காவலர்களை, ஒரு சிறுவன் தனது பின்புற பகுதியை காண்பித்து கிண்டலடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், காவல்துறை அதிகாரிகள் அந்த சிறுவனை பிடித்த பிறகு கடுமையாக கண்டித்துள்ளனர். அவர்களின் கண்டிப்பால் கண்ணீர் மல்க, அந்த சிறுவன் தனது வீட்டிற்கு போன் செய்து அழும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது போன்ற செயல்கள் சாலை விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகளை நினைவூட்டுகின்றன.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், விதிமுறை மீறலுக்கு அபராதத்துடன் முடிந்திருக்கும் என்று கூறி, இது தேவையான பாடம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். கெத்து காட்டுகிறேன் என்ற பெயரில் அவமானப்பட்டது யார் என்பது அந்த சிறுவனுக்கு இப்போது நன்றாக புரிந்திருக்கும் என்றும், இந்த சம்பவம் அவருக்கு வாழ்க்கையில் மற்றவர்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்திருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் இளைஞர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் மரியாதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Ceritadarikepri Cdk (@ceritadarikepri)