ஐபிஎல் 2026 தொடரில் அதிரடியாக 776 ரன்களைக் குவித்து, ஆரஞ்சு தொப்பியை வென்ற இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது அபாரமான ஆட்டத்தைக் கண்டு வியந்த ரசிகர்கள் பலர், அவரை சச்சின் டெண்டுல்கர், டான் பிராட்மேன், வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.

“>

இருப்பினும், இந்த ஒப்பீடுகளை வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி மிகவும் பணிவுடன் மறுத்துள்ளார். ஒரு பேட்டியில் பேசிய அவர், “ஜாம்பவான்களின் சாதனைகளுடன் என் மகனை ஒப்பிடுவது சரியல்ல. அந்த வீரர்கள் நாட்டுக்காகப் பெரும் சாதனைகளைப் படைத்தவர்கள். என் மகன் இன்னும் அந்த உன்னதமான வீரர்களின் பாத தூளிக்குக் கூட சமமாக வரவில்லை அவன் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது.