விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை தொடர்பான நீதிமன்ற விசாரணையில், தயாரிப்பு நிறுவனம் (KVN Productions) இன்று மிகக் கடுமையான வாதங்களை முன்வைத்தது. “தணிக்கை வாரியத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ஒருமனதாகச் சான்றிதழ் வழங்கப் பரிந்துரை செய்துள்ளனர். அப்படி இருக்கும்போது, ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவைச் செல்லாது என மாற்ற முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், தணிக்கை வாரியம் தனது முடிவை மறு ஆய்வு (Re-review) செய்வதற்குச் சட்டத்தில் இடமில்லை என்றும், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாதபோது மட்டுமே மறு ஆய்வுக்குச் செல்ல முடியும் என்றும் தயாரிப்பு தரப்பு வாதிட்டது. “சுமார் 500 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம் இது; தணிக்கை வாரியம் சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” என்று தயாரிப்பு நிறுவனம் ஆவேசமாகத் தெரிவித்துள்ளது.
