சென்னை மாநகர காவல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின் அடிப்படையில், 45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவல்துறையினருக்கு ரோந்து பணியில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் பெண் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் எனப் பெண் பணியாளர்கள் அனைவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ரோந்து பணியில் இருந்து விலக விரும்பும் பெண் காவலர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்கவும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். காவல்துறையில் பெண்களின் பணிச்சூழல் மென்மையானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
