அமைச்சர் பொன்முடி தொடர்பாக 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 81.7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அதில் வெளிநாட்டு கரன்சிகளும் அடங்கும். அதோடு 41.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர முறைகேடான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.