தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் 2000 வழங்கப்படும் எனவும், ஸ்கூட்டி வழங்க மானியம் வழங்கப்படும் எனவும் வீடில்லாத அனைவருக்கும் அம்மா வீடு கட்டி கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் சில புதிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

அதன்படி முதியோர் ஓய்வூதியம் 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள நிலையில் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். அத்துடன் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். அதோடு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் இந்த அறிவிப்புகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி மக்களிடம் கோரிக்கைகள் கேட்ட பெண் மேலும் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறியுள்ளார்.